'Speak now, slander'; A young man standing in front of a tea shop with a mic set

Advertisment

டீக்கடையில் அமர்ந்து தன்னை பற்றி அவதூறு பரப்பியதற்காக வாலிபர் ஒருவர் மைக் செட்டோடு குறிப்பிட்ட டீக்கடை முன்பு நின்று திட்டி தீர்த்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி. அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் சிலர் ஜான் ரவி பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜான் ரவி அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாடகைக்கு மைக் செட் ஒன்றை எடுத்து அதனை தன்னுடைய ஸ்கூட்டரில் பொருத்திக்கொண்டு திடீரென சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்றார்.

டீக்கடையின் எதிரே வண்டியை நிறுத்திவிட்டு மைக்கை ஆன் செய்து தன்னைக்குறித்து அவதூறாகப் பேசியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. அதே நேரம் டீக்கடை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாக ஜான் ரவி மீது காயங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக் செட்டையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.