Advertisment

“தாய் மொழியில் பேசுங்கள்”- உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்

“Speak in mother tongue”- Home Minister Amit Shah instructs

சர்தார் வல்லபாய் படேலின் 147 ஆவது பிறந்த நாள் விழாவில் குஜராத் கல்விச் சங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தாய் மொழியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றார்.

Advertisment

மேலும் பேசிய அவர், “நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளன என்பது முக்கியம் இல்லை.ஆனால் எந்த ஒரு மொழியும் மரணிக்க விட்டு விடக் கூடாது என நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் எந்த மொழியினை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் உங்கள் தாய் மொழியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

Advertisment

ஆசிரியர்கள் குழந்தைகளிடம் பேசும் போது அவர்களின் தாய் மொழியில் பேசுங்கள். அதேபோல் இளைஞர்களும் அவர்களின் தாய் மொழியைப் பாதுகாத்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.

வீடுகளிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேச வேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

mothertongue amithshah
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe