Advertisment

காங்கிரஸை தொடர்ந்து பாஜக பக்கம் சாயும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ க்கள்...?

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.மேலும், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர்திக்விஜய்சிங்குற்றம் சாட்டி இருந்தார்.

Advertisment

SP and BSP MLA arrive at the residence of BJP leader Shivraj Singh Chouhan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவரானஜோதிராதித்யசிந்தியா கட்சியிலிருந்து விலகினார். இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்தஜோதிராதித்யசிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை.இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின்சட்டமன்ற உறுப்பினர்கள்19 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிசட்டமன்ற உறுப்பினர்கள்பதவி விலகிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு கட்சிகளானசமாஜ்வாதிமற்றும் பகுஜன்சமாஜ்கட்சியைச்சேர்ந்தசட்டமன்ற உறுப்பினர்கள்ராஜேஷ்சுக்லாமற்றும் சஞ்சீவ்குஷ்வாஆகிய இருவரும் மத்தியப்பிரதேச பாஜக தலைவர் சிவராஜ்சிங்சவுகான் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.

congress MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe