ADVERTISEMENT

இந்தியாவில் உறுதியான தென் ஆப்பிரிக்க வகை கரோனா!

02:21 PM Mar 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குப் பரவத்தொடங்கியது. உலகமெங்கும் அதன் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், முதலில் இங்கிலாந்தில் மரபணு மாற்றமடைந்த கரோனா பரவத் தொடங்கியது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் வேறு வகையான மரபணு மாற்றமடைந்த கரோனா பரவத் தொடங்கியது.

இந்தப் புதிய வகை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒருவருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. 58 வயதான அந்த நபர், கடந்த ஒன்றாம் தேதி துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 8 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT