Advertisment

திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்; ஆத்திரத்தில் மகன்கள் செய்த கொடூரச் செயல்!

Sons commit cruel act in anger for their Mother in an extramarital affair

Advertisment

தாயுடன் திருமண மீறிய உறவில் இருந்த நபரை, இரண்டு சகோதரர்கள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (27). இவரது சகோதரர் ஜெயேஷ் தாக்கூர் (23). இவர்களது தந்தை, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தினால், தாயுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சகோதரர்களின் தாய், 45 வயதான ரத்தன்ஜி தாக்கூருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், சகோதரர்களான சஞ்சய்க்கும், ஜெயேஷுக்கும் தெரியவந்துள்ளது.

மறைந்த தந்தையின் நினைவை தாய் அவமதிப்பதாகவும், குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் இரண்டு பேரும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அதன்படி, அவர்கள் இருவரும் தங்கள் தாயிடமிருந்து விலகி இருக்குமாறு, ரத்தன்ஜியை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த உறவு தொடர்ந்து நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கடும் ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் ஜெயேஷ் ஆகிய இரண்டு பேரும், கத்தி மற்றும் தடியுடன் சென்று ரத்தன்ஜியின் வயிற்றில் குத்தினர்.

Advertisment

இதில் படுகாயமடைந்த ரத்தன்ஜிக்கு, வயிற்றில் இருந்து குடல் வெளியேறியது. ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள், அந்த குடலை எடுத்து வெளியே வீசினர். ரத்தன்ஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த இரண்டு சகோதரர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police incident Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe