Sonmentally challenged mother ; A viral video

Advertisment

மனநிலை பாதித்த தாயை நடு ரோட்டிலேயே வைத்து மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்தச் சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரைஅருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாயை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மகன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சாலையிலேயே தாயைக் குத்திக் கொலை செய்தார். இதனைக் கண்டஅக்கம் பக்கத்தினர் கொலையில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் சாலையில் நின்றிருந்தலாரியில் ஏறித்தப்பிக்கமுயன்றார். லாரியின் மீது ஏறிய மக்கள் கையும் கத்தியுமாக அவனைப் பிடித்துத்தாக்கிக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட தாயை மகனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். தற்பொழுது இது தொடர்பானகாட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.