கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ள சூழலில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் வரை 10 கிலோ உணவு தானியங்களை வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

sonia gandhis letter to modi

Advertisment

Advertisment

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே மூன்றாம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

இன்று காலை நாட்டு மக்களிடம் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும், ஏப்ரல் 20 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடரும் இந்த ஊரடங்கு, அதன்பின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கரோனா பரவல் நிலையைப் பொருத்து பகுதிவாரியாகத் தளர்த்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.

http://onelink.to/nknapp

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இல்லாத நிலையில், அவர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம்தோறும் தலா 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள கால கட்டத்தில் இந்நடவடிக்கை மிகவும் அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.