காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகக் கடந்த 12 ஆம் தேதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் ராகுல் காந்தியும் உடன்சென்றார். இந்நிலையில் சோனியா காந்தியின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று காலை ராகுல் மற்றும் சோனியா காந்தி இருவரும் இந்தியா திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.