எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விரைவில் விருந்தளிக்கவுள்ள சோனியா காந்தி!

SONIA GANDHI

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பிரசாந்த் கிஷோரை சந்தித்த பிறகு சரத் பவார், எதிர்கட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அதன்பிறகு மம்தா பானர்ஜி டெல்லியில் சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து 2024 தேர்தலில்எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைசந்திப்பது குறித்து விவாதித்தார்.

இதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளித்தார். அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது பாஜகவை ஒன்று சேர்ந்து எதிர்ப்பது குறித்து விவதைக்கப்பட்டதாககூறப்படுகிறது.

இந்தநிலையில்விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும்இரவு விருந்து அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விருந்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமூல்காங்கிரஸ் தலைவர் மம்தா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் இந்தியா முழுவதுமுள்ள15 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், எதிர்கட்சிகளிடையேயானஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக இந்த விருந்து நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

LOK SABHA ELECTION 2024 Mamata Banerjee Opposition sonia gandhi stalin
இதையும் படியுங்கள்
Subscribe