காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை!

Sonia consults with Congress executives today!

கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாககாங்கிரஸ் கட்சி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்துவருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (26/10/2021) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் வியூகங்கள், மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் ஆகியவைகுறித்து சோனியா காந்தி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

congress Delhi discussion sonia gandhi
இதையும் படியுங்கள்
Subscribe