Son shot after asking for money for expenses; father arrested

மகன் செலவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த தந்தை மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் பிரசாத். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளது. ஓங்கோல் பகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை காவலர் பிரசாத் இருந்து வந்துள்ளார்.

Advertisment

அவருடைய மகன் கமல் தினமும் டூவீலரில் அவரை அவர் பணிபுரியும் பகுதிக்குக் கொண்டு சென்று விடுவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல டூவீலரில் தந்தையை வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர், தந்தையிடம் செலவுக்கு பணம் வேண்டும் என 20000 ரூபாய் என கேட்டுள்ளார். 'எதற்காக இவ்வளவு பணம் கேட்கிறாய்' என கேள்வி எழுப்பிய ஆயுதப்படை காவலர் பிரசாத் மகனுடன் சண்டையிட்டுள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே கமல் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கமலின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.தொடர்ந்து காவலர் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

செலவுக்கு பணம் கேட்டதால் மகனையே தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.