ADVERTISEMENT

தாயை டிராக்டர் முன் தள்ளிய மகன்! காரணம்... 

04:32 PM Jun 23, 2018 | santhoshkumar

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள வாஷிம் என்னும் கிராமத்தில் நிலப்பிரச்சனையில் இருக்கும் நிலத்தில் டிராக்டர் வைத்து உழ வந்ததால் தன் சொந்த தாயை டிராக்டர் முன் தள்ளியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள வாஷிம் என்னும் கிராமத்தில் முன்ஷிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்குமிடையே நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ராவுத் என்பவர் தாசில்தாரை அனுகினார். இதையடுத்து அந்த நிலம் ராவத்துக்கு சொந்தம் என தீர்ப்பு வந்தது.


தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால் ராவத் கடந்த 21ஆம் தேதி அன்று வயலில் டிராக்டரை வைத்து நிலத்தை உழுதுகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த தால்வியும் அவரது குடும்பத்தாரும் அந்த நிலத்திற்கு வந்து பிரச்சனை செய்து உழுவதை நிறுத்த வந்தனர். டிராக்டரை நிறுத்துவதற்காக தால்வி தன் தாயையே டிராக்டர் முன் தள்ளினார். தள்ளாடிய நிலையில் இருக்கும் தாயாரை டிராக்டர் முன்னால் தள்ளியுள்ளார். இந்த வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதன்பின்னர், ராவத் மற்றும் அவரது தரப்பினர் தால்வியை மரத்தில் கட்டி வைத்ததாகவும் தகவல் வர, இது தொடர்பாக அந்தப் பகுதி காவல்துறையினர் இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT