/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/405.jpg)
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் பெண் ஒருவருக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தி வந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் மகன், அந்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் வந்து சரண் அடைந்தார்.
கொல்லப்பட்டவரின் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது என்றும், இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா? அல்லது நட்பு ரீதியாக பழகி வந்து பின்னர் பிரச்சனை ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொந்தரவு கொடுத்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த சம்பவம் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)