/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_102.jpg)
ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த தாயின் உடலை மகன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் வசித்து வருகிறார் ராம் பிரசாத் தெவன். இவரதுதாயார் கடந்த சில நாட்களாக சுவாச கோளாறு பிரச்சனையால்அவதிப்பட்டு வந்த, நிலையில் கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரியில்உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, 40 கி.மீ உள்ள கிராந்தி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு தாயாரை உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் ராம் பிரசாத் தெவன், ஆம்புலன்ஸை கேட்டுள்ளார். ஆனால் அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடலை எடுத்துச் செல்வதற்காக ரூ. 3 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் ராம் பிரசாத் தெவனிடம்அவ்வளவுபணம் இல்லாததால், இறந்த தனது தாயின் உடலைப் போர்வையால் போர்த்தி தந்தையின் உதவியுடன் தனது தோளில் சுமந்தபடி சென்றுள்ளார். வழியில் இந்த சம்பவத்தை பார்த்த தொண்டு நிறுவனம்ஒன்று ராம் பிரசாத் தெவனுக்குஇலவசமாக ஒரு ஆம்புலன்ஸைஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்பிறகு தந்து தாயாரின் உடலைஅதில் எடுத்துச் சென்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)