இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக சோமநாத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக இஸ்ரோ தலைவராக இருந்த சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது புதிய தலைவராக விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகபணியாற்றிய சோமநாத் பொறுப்பேற்றுள்ளார்.
’சந்திரயான் 2’உள்ளிட்ட பல திட்டங்களில் முக்கிய பங்குவகித்தவர்சிவன்.2019 ஆம் ஆண்டு ’சந்திரயான் 2’ திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும்பணியில் தோல்வியடைந்தபொழுது ’சந்திரயான் 2’ திட்ட நிறைவுப் பணிகளைபார்வையிட வந்தபிரதமர் மோடி சிவனை கட்டிப்பிடித்து தேற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.