publive-image

கர்நாடகாவில் பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர்.

Advertisment

கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த ரக்க்ஷிதா என்ற மாணவி கடந்த வாரத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயத்துடன் இருந்த அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரக்க்ஷிதா மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

இது குறித்து மாணவியின் தாயார் லட்சுமி பாய் கூறுகையில், “நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் காப்பாற்றலாம் என நினைத்தோம். ஆனால் அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினர். எனவே அவளது உடல் உறுப்புகளை தானம் செய்ய உடன் பட்டோம். அவள் எங்களுடன் இல்லை என்றாலும் அவளது உடல் உறுப்புகளின் மூலம் எங்காவது உயிருடன் தான் இருப்பாள்” என கூறினார்.

மாணவியின் உடல் உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்து மணிபால் மற்றும் மங்களூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.