இந்தியாவில் 15,712 பேருக்குகரோனாதொற்றுள்ளது. இந்தியாவில்கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 488 லிருந்து 506 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 2015ல் இருந்து 2230 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில்சிலதளர்வுகளைஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் நாளை முதல் சில வணிக சேவைகள் தொடங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தற்போது வணிக சேவையை தொடங்காவிடில்நிதி நெருக்கடியில் சிக்கும்நிலை ஏற்படும்எனவே சில கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் வணிக சேவைகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.