Advertisment

வெவ்வேறு நிறங்களில் சூரியகிரகணம்!

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றியது. அமாவாசை அன்று நிலா மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையமாக தென்பட்டால், அது வளைய சூரிய கிரகணம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்றும் சூரியக் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Advertisment

solar eclipse different colors in across india

இந்தியாவில் காலை 11.19 மணி வரை நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சோலார் பில்டர்கள் மூலம் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ள ஏற்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றனர்.

Advertisment

solar eclipse different colors in across india

பகுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டி, கரூர், புதுக்கோட்டை, புதுச்சேரியில் தெரிந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முழு சூரிய கிரகணம், 4 மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.சென்னை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு நிறத்தில் தெரிகிறது. அதன்படி ஊட்டியில் சிவப்பு, ஒடிஷாவின் புவனேஸ்வரில் ஊதா என வெவ்வேறு நிறங்களிலும் சூரிய கிரகணம் தெரிந்து வருகிறது.

different colors India PEOPLES HAPPY Solar eclipse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe