Advertisment

மோடி என்ன செய்தாலும் கலாய்க்கும் இணையவாசிகள்!

மோடி டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸுடன் வரப் போகிறார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது என்று செம விளம்பரம் செய்தார்கள். அவர்களுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் மோடியும் பியர் கிரில்ஸுமாக நடித்து யூ ட்யூப் சேனலில் முன்கூட்டியே இணையவாசிகள் ஒளிபரப்பி விட்டார்கள்.

Advertisment

bear grylls

உண்மையில் இந்த சூட்டிங் 2019 மக்களவைத் தேர்தலுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் சூட்டிங்கில் இருக்கும் சமயத்திலேயே புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து முடிந்தது. அதுவே தேர்தல் பிரச்சாரத்துக்கு போதும் என்று நினைத்ததால் இந்த டிஸ்கவரி சேனல் படத்தை பிறகு ஒளிபரப்பலாம் என்று இருப்பில் வைத்திருந்தார்கள்.

அதன்படி, ஆகஸ்ட் 15 விடுதலை தினம் நெருங்கும் நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு டிஸ்கவரி சேனலில் மோடி நடித்த அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

Advertisment

இதில் நடிக்கும்போது, பதற்றமாக உணர்கிறீர்களா என்று மோடியிடம் பியர் கிரில்ஸ் கேட்டாராம்... அதற்கு, “என் வாழ்க்கையில் பதற்றத்தை உணர்ந்ததே இல்லை” என்று மோடி சொன்னாராம்...

அவரு எதுக்குங்க பதற்றப்படப் போறார். பாதுகாப்புக் குழுவினர் அத்தனை பேர், சூட்டிங் குழுவினர் அத்தனை பேர் இருக்கும்போது பயப்படுறதுக்கு அவரு என்ன சின்னக் குழந்தையா? அதுவும்போக, அவருக்கு எப்பவுமே இந்திய மக்களை பதற்றத்தில் வைத்திருப்பதுதான் பழக்கம்... புல்வாமா தாக்குதலுக்கு பிளான் பண்ணிக் கொடுத்துட்டு, அதுல 45 பேர் செத்துப்போய், நாடே பதற்றத்தில் இருந்தபோதும், மோடி சூட்டிங்கில் இருக்கிறார் என்றால், அதுவே அவருடைய துணிச்சலுக்கு சரியான உதாரணம் என்று பியர் கிரில்ஸுக்கு தெரிந்திருக்க வேண்டாமா? என்று சமூக வலைத்தளங்களில் கேட்டிருக்கிறார்கள்.

அப்புறம் ஒரு கேள்விக்கு, தனது பிரதமர் பதவிக்காலத்தில் எடுத்த முதல் லீவ் இதுதான் என்று சொல்லியிருக்கிறார் மோடி. ஆமாம் நாட்டில் இருக்கும்போது பிரதமரா நடிச்சிட்டிருந்தார். பியர் கிரில்ஸுடன் சினிமா சூட்டிங்கில் நடிக்கிறார். இதுல லீவ் ஒன்னுதான் குறைச்சல் என்றும் நெட்டிஸன்கள் கலாய்த்திருக்கிறார்கள்.

மோடியுடன் பியர் கிரில்ஸ் ஷெல்பி எடுக்கும் போட்டோ ஒன்று வெளியானது. காட்டில் ஷெல்பி எடுப்பதைக்கூட சூட்டிங் குழுவினர் தனியாக போட்டோ எடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மோடியின் கேமரா மோகம் தெரிந்திருக்கிறது என்று உச்சபட்சமாக மோடியை கிண்டல் செய்திருக்கிறார்கள்.

மோடி தன்னை ஒரு சாகசக்காரராக காட்டிக்கொள்ள எத்தனை ஆர்வமாக நடிக்கிறாரோ, எவ்வளவு முயற்சிகளை செய்கிறாரோ, அந்த அளவு நல்ல பிரதமராக செயல்பட்டு, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும். மக்கள் அனைவரும் அவரவர் அடையாளங்களோடு அவரவருக்கு பிடித்த மொழியைப் பேசி, உடையை உடுத்தி, உணவை உண்டு வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

bear grylls modi
இதையும் படியுங்கள்
Subscribe