supreme court

Advertisment

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கைமத்திய அரசு தொடர்ந்து விசாரித்துவருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (03.12.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர், தொழிற்சாலைகளை மூடுவது சர்க்கரை ஆலைகளைப் பாதிக்கும் என்றதோடு, பாகிஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசத்திற்குகீழ்நோக்கி வரும் காற்றில் மாசு அடித்து வரப்படுகிறது என்றார். அதற்கு தலைமை நீதிபதி, பாகிஸ்தானில் இருக்கும் தொழிற்சாலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிறீர்களா என கிண்டல் தொனியில் கேட்டார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணை வரும் 10ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.