Advertisment

ஷூவுக்குள் பாம்பு... எச்சரிக்கை விடுக்கும் அதிர்ச்சி வீடியோ!

Snake in the shoe ... viral video to warn!

வெளியில் வைக்கப்படும் காலணிகளை அணியும் பொழுது அதனை முறையாக சுத்தம் செய்து பரிசோதிக்க வேண்டும் என அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அவசரம்மற்றும் கவனக்குறைவு காரணமாக அப்படியே அணிந்து கொள்வது வழக்கம். ஏற்கனவே கேரளாவில் பள்ளி மாணவி ஒருவரின் ஷூவிற்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்த வீடியோ காட்சிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் கர்நாடகாவிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆண்கள் அணியக்கூடிய ஷூ ஒன்றில் 'உஷ்... உஷ்...' எனசத்தம் கேட்க இளைஞர் ஒருவர் அதனை எடுத்துப் பார்க்கையில் உள்ளே சிறிய அளவிலான நாகபாம்பு படுத்திருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்தஅந்த இளைஞர் உடனடியாக குச்சியைக் கொண்டு அதனை வெளியே எடுத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

snake awareness VIRAL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe