Advertisment

யூடியூப் மோகத்தில் பாம்பிடம் சேட்டை... போட்டுத்தள்ளிய நாகப்பாம்பு

snake incident in karnataka

யூடியூப்பில் வீடியோ அப்லோட் செய்யும் மோகத்தில் இளைஞர் ஒருவர் பாம்பிடம் சேட்டை செய்ய, நாகப்பாம்பு கடித்ததில் சம்பந்தப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கர்நாடக மாநிலம் சிர்சியைச் சேர்ந்த மார்ஸ் சையது என்ற இளைஞர் தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்காக நாகப்பாம்புகள் மூன்றைப் பிடித்து முன்னாள் அமர்ந்துகொண்டு தான் கைகளை ஆசைப்பதற்கு ஏற்றவாறு பாம்புகளை அசைக்க முற்பட்டார். அப்பொழுது மூன்று பாம்புகளில் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக அவரது முழங்காலில் கடித்தது. பாம்பின் வாலை பிடித்து இழுத்தும் அது விடவில்லை. எப்படியோ மீட்கப்பட்ட சையது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 46 விஷ எதிர்ப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.ஃஎப்.எஸ் அதிகாரி சுஷாந்த் ஆனந்தா 'இது பாம்புகளை மோசமாக கையாளும் முறை' எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தநிலையில், அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

Youtube karnataka snake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe