Advertisment

இளம் பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ!

hkj

இளம்பெண் ஒருவருடைய காதில் பாம்பு நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், சிறிய அளவிலான பாம்பு ஒன்று பெண் ஒருவருடைய காதில் தலை மட்டும் வெளியே தெரியும்படி நெளிகிறது. அதனை மருத்துவ உபகரணங்களை வைத்து வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பாம்பு வாயைத் திறந்து திறந்து மூடுவதால் அதனை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த வீடியோ கடந்த செப்டம்பர் முதல் தேதி பகிரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோ அல்லது சம்பவம் நடைபெற்ற இடம் குறித்தோ இதுவரை முறையான தகவல் வெளியாகவில்லை. இறுதியில் பாம்பு வெளியே எடுக்கப்பட்டதா என்று கூட அந்த வீடியோவில் காட்டப்படவில்லை. ஆனால் பாம்பு காதினுள் செல்லுமளவுக்கு பெண் எப்படி விட்டிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை சாகசம் என்ற பெயரில் இதைச் செய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

Advertisment

snake
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe