பார்சலில் வந்த பாம்பு... அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்... (வீடியோ)

கூரியரில் ஒரு நபருக்கு பாம்பு ஒன்று அனுப்பப்பட்ட சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தனது வேலை காரணமாக ஒடிசாவில் மயூர்பன்ச் மாவட்டத்தில் ராஜரங்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.

snake in courier parcel box

அவருக்கு கூரியர் மூலமாக ஒரு பார்சல் வந்துள்ளது. கூரியர் பார்சலை திறந்து பார்த்தபோது, அதிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார். பின்னரே அங்கு வந்த வனத்துறையினர் பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர். இந்நிலையில் இதுகுறித்து கூரியர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் முத்துக்குமரன் கூறியுள்ளார்.

snake
இதையும் படியுங்கள்
Subscribe