மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...

Smriti Irani tests positive for coronavirus

மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "நான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவில் சோதனை செய்துகொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

corona virus smriti irani
இதையும் படியுங்கள்
Subscribe