ADVERTISEMENT

வேட்புமனுவில் மாற்றி எழுதி மாட்டிக்கொண்ட ஸ்மிரிதி இரானி...

01:26 PM Apr 12, 2019 | kirubahar@nakk…

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வின் ஸ்ம்ரிதி இரானி நேற்று அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமர்ப்பித்த ஆவணங்களில் அவருக்கு 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் பட்டப்படிப்பு படிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்ததாக தெரிவித்திருந்தார். அனால் காங்கிரஸ் கட்சி ஸ்ம்ரிதி இரானியின் கல்வி தகுதி பொய்யானது என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் பட்ட படிப்பு முடிக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT