Advertisment

12 வயது சிறுமி...30 பேர் செய்த கொடுமை...கைதான தந்தை...அதிர்ச்சி சம்பவம்! 

சொந்த மகளை தாய்க்கு தெரியாமல் தந்தையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 12வயது சிறுமி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மலப்புரம் பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நன்றாக படிக்கும் மாணவி அடிக்கடி பள்ளிக்கு வராமல் லீவு எடுத்துள்ளார். அதே போல் பள்ளிக்கு வரும் போது மிகவும் சோர்வாகவும், யாரிடமும் பேசாமல் மிகவும் தனிமையில் சோகத்துடன் இருந்துள்ளார். இந்த சிறுமியின் நடவடிக்கையை கவனித்த ஒரு ஆசிரியை நந்தினியை கூப்பிட்டு தனியாக ஆலோசனை வழங்கியுள்ளார். அப்போது நந்தினி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

incident

அந்த ஆசிரியைடம் நந்தினி கூறிய தகவலால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயுள்ளார். ஆசிரையிடம் நந்தினி என்ற சிறுமி கூறும்போது என்னை இரண்டு வருடங்களாக 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் என்னுடைய தந்தையின் நண்பர்களும் வருவார்கள். அப்போது இவர்கள் சொல்லும் படி நடந்து கொள் என்று என் தந்தை என்னை மிரட்டுவார். எனக்கு வேறுவழி தெரியாமல் பயத்தில் என் தந்தை சொன்னதை செய்வேன். எனது தந்தை உட்பட அவரது நண்பர்கள் மேலும் சிலர் என்னை பாளையல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு என் தந்தையும் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார்.

மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் நான் வீட்டில் இருக்கும் போது அதிக பேர் வருவார்கள். அப்போது நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்படி ஒரு சம்பவம் என்னோட வாழ்க்கையில் நடப்பது எதுவுமே என் அம்மாவுக்கு தெரியாது. என் அம்மாவிடம் சொன்னால் இரண்டு பேரையும் என் தந்தை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் இது குறித்து என் அம்மாவிடம் நான் எதுவும் கூற முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சிறுமி நந்தினி கூறியதை கேட்ட ஆசிரியை மற்றும் ஆலோசகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் இதுகுறித்து காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரனையில் தந்தையே பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளியது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த சிறுமி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

parents teachers incident school girl
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe