Advertisment

'நிறவெறியை தூண்டும்' - இந்தியர்களுக்கான இங்கிலாந்தின் கட்டுப்பாடுகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

sasi tharoor jairam ramesh

Advertisment

கரோனாதொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துவருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இங்கிலாந்து அரசும்அவ்வாறுபல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

இந்தநிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அறிவிப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திகொண்டர்வர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்படும் என்றும் இங்கிலாந்து அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 4ஆம்தேதி முதல்இந்தப் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளால், இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து சென்றாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதால் இங்கிலாந்தின் அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விதிமுறைகள் காரணமாக நான் கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெற இருந்த ஒரு விவாதத்திலிருந்து வெளியேறிவிட்டேன். மேலும், எனதுபுத்தகத்தின் இங்கிலாந்து பதிப்பான ‘தி பேட்டில் ஆஃப் பிலாங்கிங்’கின் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேறிவிட்டேன். முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களைத் தனிமையில் இருக்குமாறு கூறுவது குற்றம். பிரிட்டிஷ்காரர்கள் மதிப்பாய்வு செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷும் இங்கிலாந்தின் புதிய விதிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர், "கோவிஷீல்ட்முதலில் இங்கிலாந்தில்தான் தயாரிக்கப்பட்டது என்பதை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்தின் விதிமுறை மிகவும் விநோதமானது. மேலும், சீரம் நிறுவனம் அந்த நாட்டிற்கும்தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது இனவெறியைத் தூண்டும்" என தெரிவித்துள்ளார்.

England jairam ramesh shashi tharoor
இதையும் படியுங்கள்
Subscribe