SL Dharmegowda, Deputy Speaker of State Legislative Council RAILWAY TRACK POLICE

Advertisment

கர்நாடக மாநில சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி பா.ஜ.க.வினர் பசுவதைத் தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற சபாநாயகர் பிரசாத் சந்திரஷெட்டி (காங்கிரஸ்) வரும் முன் கர்நாடக சட்டமேலவை சபாநாயகர் இருக்கையில் எஸ்.எல்.தர்மேகவுடாவை அமரவைத்தனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் அமர வைத்த தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக இழுத்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் சிக்மகளூரு அருகே கடூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.எல்.தர்மேகவுடாவின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.