பிரபல நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தெலங்கானா மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிகுடா கிராமத்தில் நடிகர் நாகர்ஜூனாவிற்கு சொந்தமான பண்ணை வீடு, தோட்டம் ஆகியவை 50 ஏக்கர் நிலப் பரப்பில் உள்ளது. இந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் பணியாட்கள் விவசாய பணிக்காக சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நாகர்ஜூனாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது இறந்து போன நபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக அங்கிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை கைப்பற்றிய காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அந்த எலும்புக்கூடு பாப்பிரெட்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த சக்காலி பாண்டு (30) என்பவரது உடல் என்று தெரிய வந்தது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், சகோதரரின் இறப்பு காரணமாக கவலையில் இருந்த அவர், தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.