Skip to main content

தந்தையின் கனவை நிறைவேற்ற 63 வயதில் மருத்துவம் படிக்கும் மூதாட்டி

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

sixty three years old sujatha medical students viral karaikal medical college

 

மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (வயது 63). இவரது மனைவி சுஜாதா ஜடா (வயது 63). இவர் இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மருத்துவராக முடிவெடுத்தார்.

 

இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் முயற்சி செய்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றார். இதனையடுத்து காரைக்காலில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சுஜாதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மருத்துவ மாணவியாக முதலாம் ஆண்டில் சுஜாதா கல்லூரியில் அடியெடுத்து வைத்தார்.

 

இந்நிலையில் தற்போது தனது 63 ஆம் வயதில் சுஜாதா மருத்துவம் படித்து வருவது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் வினோத் யாதவ் - சுஜாதா ஜடா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மருத்துவம் படிப்பது பற்றி சுஜாதா தெரிவிக்கையில், “நான் சிறுவயதில் இருக்கும் போது எனது தந்தை மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். அதனை நினைத்து பார்த்து அதற்காகத்தான் முறையாக மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். எனது கிராமத்தில் சிறு மருத்துவமனை ஒன்றை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூதாட்டியின் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண்கள்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
women who carried the old woman's body to   cemetery

பொதுவாக மயானத்திற்கு பெண்கள் வரக்கூடாது. நெருக்கமான உறவுகளே உயிரிழந்தால் கூட பெண்கள் மயானத்திற்கு வந்து அடக்கம் செய்யகூடாது. ஆண்கள் மட்டுமே மயானத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்யவேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அவ்வப்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கத்தை மாற்றி பெண்களும் மயானத்திற்கு வரலாம் என்று அங்காங்கே சில இடங்களில் பெண்களே தங்களது உறவினர்கள் உடலை மயானம் வரை சுமந்துச் சென்று அடக்கம் செய்து பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் இதே போன்ற ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திராணி என்ற 83 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக   இந்திராணி  உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூதாட்டி இந்திராணியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வந்த திராவிட கழக பெண்கள் இந்திராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்திராணியின் உடலை திராவிடக் கழக பெண்கள் மயானம் வரை தோலில் சுமந்துச் சென்றனர். அதன் பின்பு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Next Story

ஹத்ராஸ் சம்பவம்; நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ராகுல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Hadhras Incident; Rahul went to offer condolences in person

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 02.07.2024 அன்று ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசம் அலிகர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

nn

மொத்தம் 26 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்கட்டமாக அலிகர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்தித்து அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதியை அவர் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் 'தேவையான நீதியும் பெற்றுத் தரப்படும். அதற்கும் தான் உறுதியுடன் இருப்பேன்' என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட உறவினர்களின் குடும்பத்தாருக்கு ராகுல்காந்தி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.