ADVERTISEMENT

'கைப்பையில் கைக்குழந்தை' விமான நிலையத்தை அதிர செய்தி இளம்பெண்!

12:28 PM Sep 06, 2019 | suthakar@nakkh…


பிலிப்பைன்ஸ் நாட்டுச் சட்டத்தின்படி குழந்தைகளை வேறு நாட்டுக்கு அனுப்புவதாக இருந்ததால், அவர்களுடைய பெற்றோரின் அனுமதிக் கடிதத்தைக் காட்டினால் மட்டும்தான் அனுமதிக்கப்படும். இந்நிலையில் அந்நாட்டு விமான நிலையத்தில் பிறந்து வெறும் 6 நாட்களே ஆன கைக்குழந்தையை, ஒருபெண் தனது கைப்பையில் வைத்துக்கொண்டு விமான ஏற சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார், அந்தக் குழந்தையை மீட்டனர். பின்னர், அக்குழந்தையை குறித்த அனுமதிக் கடிதம் ஏதாவது இருக்கிறதா எனக் அவரிடம் கேட்டுள்ளனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அதற்கு அப்பெண் எதுமில்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில் பச்சிளம் குழந்தை என்பதால் இக்குழந்தை யார்? எதற்காக கொண்டு செல்கிறீர்கள்? எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்பது போன்ற தீவிரமான விசாரணையை அப்பெண்ணிடம் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தலை தடுக்க பிலிப்பைன்ஸ் அரசு கடுமையான வழிமுறைகளை பின்பற்றுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இதுக்குறித்து பேசுகையில் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT