இந்தியா முழுவதும் நேற்று (11/04/2019) மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்கள் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு சுமார் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளில் நடைப்பெற்றது. இதில் ஆந்திரா மாநிலத்தில் மட்டும் வாக்கு சாவடிகள் மையத்தில் 6 வாக்கு பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machines) "EVMs" சேதமாகியது. மேலும்அருணாச்சல பிரதேசத்தில் 5 வாக்கு பதிவு இயந்திரங்களும் , பீகார் மாநிலத்தில் ஒரு வாக்கு பதிவு இயந்திரங்களும் , மணிப்பூரில் 2 வாக்கு பதிவு இயந்திரங்களும் , மேற்கு வங்கத்தில் ஒரு வாக்கு பதிவு இயந்திரங்களும் மொத்தமாக முதற்கட்ட தேர்தலில் சுமார் 15 வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதமாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

evm machine

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதே போல் ஆந்திர மாநிலத்தில் நேற்றைய தினம் அசம்பாவித சம்பவங்கள் அதிகமாக நிகழந்ததால் தான் வாக்கு பதிவு இயந்திரங்கள் கட்சியினரால் சேதமாக்கப்பட்டுள்ளனர் எனவும் , துணை ராணுவ படை வீரர்கள் இந்த வாக்கு சாவடிகள் மையத்தில் இல்லாததும் ஓர் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழும் என இந்திய தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கவில்லை. அதனை தொடர்ந்து முதற்கட்ட மக்களவை தேர்தல் நடந்த மாநிலங்களிலேயே ஆந்திர மாநிலத்தில் தான் அதிக அளவில் வன்முறைகள் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். எனவே இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் பாதுகாப்பிற்காக துணை ராணுவ படை வீரர்கள் அதிக அளவில் அனைத்து வாக்கு சாவடி மையத்திலும் குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.சந்தோஷ் , சேலம் .