Skip to main content

கஸ்டம்ஸ் கஸ்டடியில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

Sivasankaran, former secretary of pinarayi Vijayan case

 

 

கேரளாவில் கரோனாவுக்கு மத்தியிலும் பெரும்  பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒடி கொண்டிருக்கும் சம்பவம் ஸ்வப்னா சுரேஷின் தங்க கடத்தல் விவகாரம். இந்த விவகாரத்தின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கேரளா முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் 2 மாதத்துக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சுங்கத்துறை மற்றும் அமலாக்கதுறையின் விசாரணை வளையத்தில் இருந்த சிவசங்கரன் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரளா உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் பெற்று தனது மனைவி கீதா டாக்டராக பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து பிறகு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

 

தொடா்ந்து அங்கிருந்து வஞ்சியூரில் ஆயூா்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் 23ஆம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்ய தடை விதித்திருந்தது. அதன் பிறகு 23ஆம் தேதி மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அப்போது 28ஆம் தேதி வரை  கோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் முன்ஜாமீன்  கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள் கஸ்டம்ஸ் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அவா் மீது குற்றச்சாட்டுகள் ஆணித்தரமாக உள்ளது, அவரை விசாரிக்க வேண்டும். மீண்டும் முன்ஜாமீன் கொடுத்தால் அவர் மீதான விசாரணைக்கு தடையாக இருக்கும். இதனால் இந்த வழக்கும் நீண்டு கொண்டே தான் செல்லும். இதை தொடர்ந்து தான் சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

இதனை தொடர்ந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிவசங்கரனை ஆயூர்வேத மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய வைத்து அவரை கொச்சியில் இருக்கும் கஸ்டம்ஸ் மண்டல அலுவலகத்துக்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் 13 கேள்விகள் கேட்க இருக்கின்றனர். அந்த கேள்விகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் சிவசங்கரன் கைது செய்யப்படாலம் என்கிறது கஸ்டம்ஸ் வட்டாரம்.

 

இதற்கிடையில் கேரளா சட்டமன்ற எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் தங்கக் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிட்டு அதை வேறொருவரிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். சிவசங்கரன் கைது செய்யப்பட்டால் கேரளாவில் துறை செயலாளா்களில் கைது செய்யபட்ட முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவா் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.