ADVERTISEMENT

நாசாவுக்கு முன்னரே விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ... சிவன் வெளியிட்ட தகவல்...

10:36 AM Dec 04, 2019 | kirubahar@nakk…

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விக்ரம் லேண்டர் பாகங்களையும், விழுந்த இடத்தையும் கண்டுபிடித்ததாக நாசா நேற்று தெரிவித்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதமே விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திராயன்- 2 விண்கலத்தை GSLV மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில் தமிழக பொறியாளர் ஒருவரின் ஆய்வின் அடிப்படையில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி சந்திரயான்-2ன் ஆர்பிட்டரை கொண்டு முன்பே கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் இன்னும் ஏற்படவில்லை. விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கடந்த செப்டம்பர் 9ந்தேதியே இஸ்ரோ தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டு உள்ளது. இதனை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT