Skip to main content

"எம்எல்ஏ-ன்னு சின்னதா சொல்லாதீங்க சார்... பி.எம் ஆகணும்" - சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளை நெகிழ வைத்த அரசுப் பள்ளி மாணவிகள்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

 "Sir don't call me MLA. I want to become a PM" - Government school girls who made the Speaker and other officials flexible.

 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை பள்ளி மாணவ மாணவிகள் நேரில் பார்த்து தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவிகளுக்கு சட்டசபை நிகழ்வுகளை பார்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதன்முறையாக திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20-பேர் சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் மைய மண்டபத்திற்கு உள்ளே சென்ற அவர்கள் பார்வையாளர்கள் அறையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக அரசுப் பள்ளி மாணவிகள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

 

இதனையடுத்து சட்டப்பேரவை அலுவலகம் சென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் செல்வம் சிற்றுண்டிகளை வழங்கினார். தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சபாநாயகர் செல்வம் நினைவு பரிசினையும் வழங்கினார். அப்போது சட்டப்பேரவை தலைவர் செல்வம் மாணவிகளை பார்த்து, 'சட்டப்பேரவை நிகழ்வுகளின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்? மேலும் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரும் மாணவிகளிடம், 'என்ன எம்.எல்.ஏ-வாக விரும்புகிறீர்களா? என்று கேட்க, அதற்கு பதில் அளித்த மாணவிகள், "என்ன சார் எம்.எல்.ஏ-வோட நிறுத்திட்டீங்க... பி.எம் ஆகணும்" என்று கூறி சபாநாகரையும், அதிகாரிகளையும் நெகிழ வைத்தனர். மேலும் தங்களது பள்ளி அருகே மதுபானக் கடை உள்ளது. இதனால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். எனவே அந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்றி தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாணவிகள் கூறும்போது,  " சட்டசபை நிகழ்வுகளை இதுவரை பார்த்ததில்லை. நேரில் பார்த்தது நல்ல அனுபவமாக உள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொண்டோம். மேலும் சபாநாயகரிடம் பேசும்போது எங்கள் பள்ளி அருகாமையில் உள்ள மதுபானக் கடையை அகற்றி கொடுக்க வேண்டும்"  என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.