A single tweet... a world famous grandfather

Advertisment

ட்விட்டரில் ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்த ஒரே நாளில் உலக பேமஸ் ஆகியுள்ளார் ஒரு முதியவர்.

ராஜீவ் மேத்தா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் வீடியோ பதிவில் கால் சட்டையுடன் நிற்கும் முதியவர் ஒருவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அந்த முதியவர் தனக்கு எல்.என்.டியில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளேன். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவன பங்குகள்; ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கர்நாடக வங்கியின் பங்குகளை வைத்திருப்பதாகவும், இருந்தாலும் தான் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்து வருவதாய் அசால்ட்டாக புட்டு புட்டு வைத்தார். ஆனால், இது உண்மையா பொய்யா என தெரியாமல் வீடியோவை பார்ப்பவர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் அந்த முதியவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை தான் வைத்துள்ளார். ஆனால் மாற்றி சொல்கிறார்என்றும்தெரிவித்து வருகின்றனர். எப்படியோ ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் அந்த தாத்தா.