mp

மத்திய பிரதேசத்திலுள்ள டாட்டியா மாவட்ட மருத்துவமனையில் நேற்று தவறான ஊசியை பயன்படுத்தியதால் ஒரு நோயாளி பலி, 25 நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இதுகுறித்து போலீஸ் தெரிவிக்கையில், இங்கு வேலை பார்க்கும் நர்ஸுகளின் அலட்சியத்தால் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை பலருக்கு பயன்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறுகின்றனர்.

Advertisment

மேலும், இதுகுறித்து பி.கே சர்மா என்னும் மருத்துவர் தெரிவிக்கையில், "அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை பயன்டுத்தியுள்ளனர். டிஸ்டில்டு நீருக்கு பதிலாக சாதாரண நீரை ஊசியை சுத்தம் செய்ய பயன்படுத்தியுள்ளனர்" என்றார்.