silver lake invests in reliance jio

ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்ந்து, சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.5,655.75 கோடி முதலீடு செய்கிறது.

Advertisment

Advertisment

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையால், பல்வேறு நிறுவனங்களும் கடும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதேபோல இந்தியப் பங்குச்சந்தையிலும் பல நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. ஆனால், இந்தச் சூழலிலும் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து பல சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று லாபத்தைப் பெற்று வருகிறது. சமீபத்தில் ரூ.43,574 கோடியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை வாங்கிய ஃபேஸ்புக். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.6 லட்சம் கோடியாக உயர்ந்தது.

இரு பெரும் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இதன் விளைவாக ஒருநாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியின் டாலர் வரை உயர்ந்து, மீண்டும் ஆசியாவின் பணக்காரர் என்ற பெயரை முகேஷ் அம்பானி பெற்றார். இந்நிலையில் தொழில்நுட்ப முதலீட்டில் முன்னணி நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் ரூ.5,655.75 கோடி முதலீடு செய்கிறது. சில்வர் லேக் நிறுவனத்தின் இந்த முதலீடு ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.