Advertisment

நேத்ராவதி ஆற்றில் தொழிலதிபர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு!

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமானநிலையில் தற்போது அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

police

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தாவின்உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி மங்களூரு அருகேகாரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில்காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 Siddhartha's body found in Netravati River

Advertisment

police

மின்ட் ட்ரீநிறுவனத்தின்பங்குகளை அண்மையில் விற்ற நிலையில்அதேபோல் தனது கஃபே காபிடேநிறுவனத்தையும் கொக கோலா நிறுவனத்திற்கு விற்கசித்தார்த்தா பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்த அவர் ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன் எனதனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று முன்தினம் காணாமல் போனார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்தநிலையில் அவரது உடல் தற்போது நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

rivers Businessman karnataka sidharth cafe coffee day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe