Advertisment

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டப்பேரவையில் சித்தராமையா ஆவேச பேச்சு... அவையில் சிரிப்பலை!

hj

Advertisment

கர்நாடக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இன்று (23.09.2021) ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆளும் பாஜக அரசையும், காவல்துறையினர் செயல்பாடுகளையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்துவந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருடைய வேட்டி அவிழ்ந்து விழுந்துள்ளது. இதைக் கவனிக்காத அவர், தொடர்ந்து ஆளும் பாஜக அரசை விமர்சனம் செய்துவந்தார்.

வேட்டி அவிழ்ந்து விழுவதைக் கவனித்த அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார், அவரின் காதருகே சென்று சம்பவத்தை விவரித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொள்ளாமல், ‘என்னது வேட்டி கீழே விழுந்துவிட்டதா?’ என்று மைக்கிலேயே கூறியுள்ளார். இதனால் ரகசியமாக சிவகுமார் கூறியதை சித்தராமையா அவையில் அனைவருக்கும் தெரியுமாறு மைக்கில் கூறிவிட்டார். இதனால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது. தன்னுடைய தொப்பை பெரிதாகிவிட்டதால் வேட்டி அவிழ்ந்துள்ளது என அந்த சம்பவத்திற்கு விளக்கமளித்தார் சித்தராமையா.

Karnataka assembly Siddaramaiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe