Advertisment

கர்நாடக முதல்வர் யார்? - டெல்லி விரையும் சித்தராமையா

Siddaramaiah is going to Delhi today

Advertisment

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135இடங்களையும், பாஜக 66இடங்களையும்,மஜத19 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதைதேர்வு செய்வதற்காகநேற்றுபெங்களூருவில்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார்ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார்ஜிதேந்திர சிங்தலைமையில் எம்.எல்.ஏக்கள்கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைதலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகமுதல்வர்பதவிக்கு முன்னாள் முதல்வர்சித்தராமையாவுக்கும்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்றுபோஸ்டர்கள்ஒட்டி வருகின்றனர். இதுகர்நாடகாவில்பரபரப்பைக்கிளப்பியுள்ளது.

Advertisment

இந்நிலையில்எம்.எல்.ஏக்கள்அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படும்ஆலோசனைக்கூட்டம் தலைவர்மல்லிகார்ஜூனகார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் இன்றுநடைபெறவுள்ளது. இந்த நிலையில்சித்தராமையாஇன்று டெல்லிசெல்லவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

“நீங்கள் ஏன் டெல்லி செல்லவில்லை” என்ற கேள்விக்கு, “நான் தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். அதனால் டெல்லி செல்லவில்லை” என்று டி.கே.சிவகுமார்கூறியிருந்த நிலையில்சித்தரத்தையாடெல்லி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து இன்று நடைபெறும்ஆலோசனைக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுஅறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மே 18 ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

congress Siddaramaiah
இதையும் படியுங்கள்
Subscribe