Skip to main content

'திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது' -அரசு உத்தரவு

Published on 25/05/2020 | Edited on 25/05/2020
should not sell assets of Tirupati Devasthan- Government order

 

திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துக்களை ஏலம் விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்க பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிர்ப்பு கிளம்பியதால் தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.