Skip to main content

காலதாமதம் இல்லாமல் மேகதாது அணைக்கு ஒப்புதல் வேண்டும்;மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை!!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

 

 

kumarasamy

 

6000 கோடி ரூபாய் செலவில் கர்நாடகத்தில் 5-தாவது அணையாக மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பான ஒப்புதலை பெற கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

 

அதேபோல் தமிழக அரசு தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு எழுதிய கடித்ததில் கர்நாடக அரசுக்கு மேகதாது அணைகட்ட ஒப்புதல் தரக்கூடாது. ஏற்கனவே  தமிழகத்திற்கு நீர் திறக்காத கர்நாடக அரசு இந்த அணையை கட்ட நேர்ந்தால் உபரி நீர் கூட திறக்காது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தரவேண்டும் என நேரில் வலியுறுத்தியுள்ளார். மேலும் காலதாமதம் இல்லாமல் ஒப்புதல் வழங்கவேண்டும் ஒத்துழைப்பையும் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்