Advertisment

ஆட்டு புழுக்கையால் வந்த சண்டை... துப்பாக்கிச்சூட்டில் முடிந்த பரிதாபம்!

உத்தரபிரதேசம் மாநிலம் எடா மாவட்டத்தில் உள்ள ஜைத்ரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுக்வீர். இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக பல வருடங்களாக பகை இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சுக்வீருக்கு சொந்தமான ஆடு ஒன்று அவரின் பகையாளியான யோகேஷின் வீட்டுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வீட்டில் புழுக்கையை போட்டுவிட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த யோகேஷ், இதுதொடர்பாக சுக்வீரிடம் கேட்க, உடனே இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

Advertisment

இதனை அடுத்து இரு வீட்டு ஆதரவாளர்களும் கம்புகளால் தாக்கிகொண்டும், துப்பாக்கியால் சுட்டும் சண்டையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். ஆடு புழுக்கை போட்டதற்காக துப்பாக்கியால் சுட்டு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பீதியடைய வைத்துள்ளது.

Advertisment

goat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe