/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/car_23.jpg)
குஜராத் மாநிலம், கோத்ரா நகர் கன்கு தம்பலா பகுதியில் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள பூச்சிக்கொல்லி மற்றும் உணவு பொருள் ஆகியவற்றை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட முயன்றிருக்கிறார். இதனை கண்ட அக்கடையின் உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.
மேலும், கார் ஒன்றில் அந்த நபரை கயிற்றால் கட்டி வைத்து தம்பலா பகுதியில் சுற்றி வந்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து குஜராத் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று உணவு திருடிய நபரையும், அவரை பிடித்து கட்டி வைத்து தாக்கிய நபர்களையும் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு திருட முயன்றவரையும், அவரை காரில் கட்டி வைத்து சுற்றி வந்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)