புல்வாமா மாவட்டத்தில் உள்ள லசிபொரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் மோதல் நடத்தியதில் 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Advertisment

shoot out in pulwama lassipora

இன்று காலை தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்த இந்த சண்டையில் மூன்று ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு காவலர் காயமடைந்தனர். காயமடைந்த அதிகாரிகள் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் எந்த உயிர் சேதமும் இல்லை எனவும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.