Advertisment

பெற்ற தாயையே கொலை செய்த மகன்; வெளியான திடுக்கிடும் தகவல்!

 shocking information revealed on Son hit his own mother in delhi

தலைநகர் டெல்லியின் தயால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயது பெண்; இவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சோனு (40) என்ற மகன் இருந்துள்ளார். ஓட்டுநராக வேலை பார்த்து வந்த சோனு, தற்போது வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, பணம் கேட்டு தனது தாயுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று இரவு அவர்களுக்கு இடையே வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனு, தனது தாயை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சோனுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi incident police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe