Shocking information in the investigation on A laborer who incident happened his minor wife in karnataka

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி. இவரும், 13 வயதான சிறுமியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

Advertisment

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி காலை, தனது மனைவி காய்ச்சலால் அவதி அடைந்து வந்ததாகவும், அப்போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாகவும், தொழிலாளி தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அந்த பெண்ணைபரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவர்கள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

அந்த பிரேத பரிசோதனையில், சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதில், சந்தேகமடைந்த போலீசார், தொழிலாளியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே, அந்த சிறுமி கணவரிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ளார். இதனால், தனது மனைவியின் நடத்தை மீது தொழிலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிலாளி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், வழக்கம்போல், கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி இரவு அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த தொழிலாளி, தனது மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், அந்த பெண்மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அன்று இரவு முழுவதும் இறந்து போன தனது மனைவி உடலுடன் தொழிலாளி தூங்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து, மறுநாள் காலையில் தனது மனைவியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். மைனர் மனைவியை தொழிலாளி ஒருவர் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.