/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nakni.jpg)
ஆந்திரப் பிரதேச மாநிலம், பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றுவெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே முட்புதரில் நிர்வாண நிலையில் அப்பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்றஇளம்பெண் உயிரிழந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)